முழுவிவரங்கள்
மாறிவரும் டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளப் பயன்பாடு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் எளிதில் செய்தித் தகவல்கள் வேகமாக பரவுகிறது. ஆனால் நாம் பார்க்கும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. தவறான தகவல்கள், புள்ளிவிவரங்கள், தேவையற்ற வதந்திகள் சமூக வலைத்தளங்கள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”
என்ற வள்ளுவனின் வரிகளுக்கேற்ப எந்த விடயமானாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
புரளிகளினால் கலவரங்களும் உயிரிழப்புகளும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நாளுக்கு நாள் உருவாகிறது. இதற்காக 2017 தொடக்கத்தில் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விக்னேஷ் காளிதாசனின் யோசனையில் ஐயன் கார்த்திகேயனுடன் இணைந்து YOUTURN முகநூல் பக்கம் தொடங்கப்பட்டது. மீம்ஸ் வாயிலாக நகைச்சுவை உணர்வுடன் புரளிகளை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் பதிவுகளை பற்றிய விளக்கமும் கூடுதல் தகவல்களைத் தருவதற்கு www.en.youturn.in இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
எங்கள் செயல்பாடு:
சமூக வலைத்தளத்தில் பரவும் செய்திகளை ஆராய்ந்து முறையான ஆதாரத்துடன் தருகிறோம். நம்பத்தகுந்த செய்தி நிறுவனம், அதிகாரப்பூர்வமான தளங்கள், அரசின் அறிக்கைகள் மற்றும் youturn குழு செய்தி சார்ந்த துறை வல்லுநர்களிடம் தொடர்பு கொண்டும் சரியான ஆதாரத்தை கண்டறிகின்றோம்.
முழுமையான ஆதாரம் இருந்தால் மட்டுமே செய்தி பதிவு செய்யப்படும். எங்கள் இணையத்தளத்தில் செய்திகளுக்கு கூடுதல் தகவல்களோடு விளக்கமளிக்கிறோம். பதிவின் ஆதாரங்களின் இணைப்புகள் கொடுக்கப்படும். புதிய தகவல் கிடைத்தால் பதிவு புதுப்பிக்கப்படும். பதிவுகள் ஒரு பக்கச் சார்புடையதாக இருக்காது. முறையாக தவறுகள் ஏதேனும் சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக் கொள்ளப்படும். யார் மனதும் புண்படும்படியாக கருத்துகள் இடப்படுவது இல்லை. கண்ணியமான நடைமுறையை பின்பற்றுகிறோம். செய்திகள் மக்களை எளிதில் சென்றடையும் விதமாக நகைச்சுவை உணர்வுடன் மீம்ஸ் ஆக பதிவு செய்கிறோம். பரிந்துரைகள் மற்றும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. முறையாகப் பார்த்து மேம்படுத்துகிறோம்.
மதிப்பீடு செய்யும் முறை:
*உண்மை (TRUE)
*பொய் (FAKE)
*இரண்டும் கலந்தது (MIX)
4 முத்திரைகள் தகவலின் தன்மைக்கேற்ப இடப்படுகிறது.
பிற ஊடக அங்கிகாரம்:
எமது நிறுவனத்தை பற்றிய செய்திகள் விகடனில்,
YOURSTORY-இல் YOUTURN பற்றிய கட்டுரை,
TedX talk-இல் Youturn கலந்துகொண்டு , வதந்திகளை பற்றிய தமிழில் உரை,
தமிழ் இந்து பத்திரிகையில்,
BIG FM,
8K Radio Interview
ஸ்மைல் சேட்டை நடத்திய DESI (Digital Excellence of South India) விருதுகள் 2017-இல் BEST FACEBOOK INFOTAINMENT PAGE எனும் விருதினை நம் You Turn பெற்றது.
தொடர்பு கொள்ள: